TNHSP Logo
044-24345992 , 044-24335993 pdtnhsp@gmail.com
TNHSP Logo

About Us

Home > About Us

தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம்

தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. உலக வங்கி இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டிய நிதியினை நல்க ஒப்புக்கொண்டு 19.03.2019 அன்று சுகாதார சீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. புது டெல்லியில் தமிழக அரசின் சார்பில் தமிழக சுகாதார துறை செயலர் மற்றும் சுகாதார திட்ட இயக்குநர் மற்றும் உலக வங்கி இயக்குநர் அவர்களும் கடன் உதவி ஒப்பந்தத்தில் 04.06.2019 அன்று கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு இந்திய ரூபாய் மதிப்பில் 2857.003 கோடிகள் (அமெரிக்க டாலரில் 410 மில்லியன்). இத்திட்டத்திற்கான உலக வங்கியின் பங்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1999.902 கோடிகள் (அமெரிக்க டாலரில் 287மில்லியன்கள்), தமிழ்நாடு அரசு 857.101 கோடிகள் (அமெரிக்கா டாலரின் 123 மில்லியன்கள்) கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது. இத்திட்டம் உலக சுகாதார அமைப்பின் திட்டமான நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) (அனைவருக்கும், அனைத்து வயதினருக்குமான சுகாதார திட்டம்) எட்டும் குறிக்கோளுடன் 5 வருடங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் மேம்படுத்தப்பட்ட தரமான சிகிச்சை, தொற்றாநோய்கள் மற்றும் காயங்களுக்கான மேம்படுத்தப்பட்ட மேலாண்மை, பேறுசார் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை நீக்குதல் ஆகியன ஆகும்.

திட்ட மேம்பாட்டு குறிக்கோள் குறிக்காட்டிகள்
  • checkmark தர சான்றிதழ் (ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, மற்றும் மூன்றாம் நிலை) பராமரிப்பு உடன் கூடிய பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
  • checkmark ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, மற்றும் மூன்றாம் நிலை வசதிகளுக்கான தர மதிப்பெண்களை அதிகரித்தல்.
  • checkmark கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கான பொதுத் துறை வசதிகளில் நோய்கண்டறிதல் திறன்களை அதிகரித்தல்.
  • checkmark உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
  • checkmark விபத்து மற்றும் காயம் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துதல்
  • checkmark முன்னுரிமை மாவட்டங்களில் மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார சேவைகளின் பயன்பாட்டை அதிகரித்தல்.
இடைநிலை குறிகாட்டிகள்
  • checkmark ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் தர மேம்பாட்டு குறியீடுகளை செயல்படுத்துதல்.
  • checkmark இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பொது மருத்துவமனைகளின் நோயாளிகளின் அனுபவ தன்மைகளை கண்ட அறிதல்.
  • checkmark புதுப்பிக்கப்பட்ட சமூக மற்றும் நடத்தை வியூகம் செயல்படுத்துதல்.
  • checkmark ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் மனநலம் குறித்து பயிற்சி பெற்ற மருத்துவர்களை அதிகரித்தல்.
  • checkmark தற்கொலை தடுப்பு அவசர உதவி எண் நிறுவுதல்.
  • checkmark நவீன ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகரித்தல்.
  • checkmark விபத்து மற்றும் காய பராமரிப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
  • checkmark சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பை வலுபடுத்துதல்.
  • checkmark ஒருங்கிணைப்பு செயல்திறன் அடிப்படையிலான மேலாண்மை, கற்றல் மற்றும் பிற குறுக்கு வெட்டு செயல்பாடுகளை சிறந்த முடிவுகளுக்காக வலுப்படுத்தல்.
  • checkmark குடிமக்கள் ஈடுபாடு மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை அதிகரித்தல்.
இத்திட்டம் மூன்று அடுக்கு கட்டமைப்புடன் கீழ்க்கண்டவாறு நிர்வகிக்கப்படுகிறது
  • checkmark மாநில அதிகாரம் பெற்ற குழு (State Empowered Committee) - அரசு தலைமை செயலாளர் தலைமையில் செயல்படுகிறது.
  • checkmark திட்ட வழிகாட்டும் குழு - சுகாதார செயலாளர் தலைமையில் செயல்படுகிறது.
  • checkmark திட்ட மேலாண்மை குழு - திட்ட இயக்குநர் தலைமையில் செயல்படுகிறது.

திட்ட மேலாண்மை குழு 16.10.2019 அன்று நிறுவப்பட்டது முக்கிய பதவிகள் அனைத்தும் நிரப்பபட்டுள்ளன.

இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மற்றும் வட்ட மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் 05.09.2019 அன்று பெறப்பட்டது.

இந்த திட்டத்திற்கான நிதி ஆண்டுதோறும் சுகாதாரத் துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழக அரசு வழங்கும். துறை இயக்குநர்கள் தங்கள் வருடாந்திர வரவு செலவுத் திட்டத்தில் நிதித் துறையிடமிருந்து நேரடியாக அவர்களால் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளைப் பெறுவார்கள். சுயாதீன சரிபார்ப்பு அமைப்பின் முடிவுகள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக சுகாதார சீர்திருத்த திட்டத்திற்கு உலக வங்கியால் நிதி வழங்கப்படும்.

முதலாம் ஆண்டு செயல்பாடுகள் (2019-2020)
வ.எண் செயல்பாடுகள் கோரப்பட்ட தொகை (ரூ.)
1 மருத்துவமனையில் தரச்சான்றிதழ் பெறுதல் - முன்கூட்டியே பெறப்பட்டவை (8 ஆரம்ப நிலை மற்றும் 7 இரண்டாம் நிலை மருத்துவமனைகள்) 11,01,68,823
2 மருத்துவமனையில் தரச்சான்றிதழ் பெறுதல் (21 ஆரம்ப நிலை மற்றும் 9 இரண்டாம் நிலை மருத்துவமனைகள்) 17,74,82,601
3 தர பராமரிப்பு வியூகத்தை உருவாக்குதல் மற்றும் அரசாணை பெறுதல் 49,64,91,375
4 விபத்து மற்றும் காயப் பதிவு உருவாக்குதல் மற்றும் ஏற்றுக் கொள்ளுதல். ஒரு மருத்துவமனையில் விபத்து மற்றும் காயப் பதிவு நிறுவுதல். 7,21,21,905
5 இடை முக பரிமாற்றம் குறைப்பதற்கான வியூகம் உருவாக்குதல் மற்றும் தற்காலிக இடைமுக பரிமாற்றத்தை மருத்துவமனைகளில் பகுப்பாய்வு செய்தல் 6,96,83,000
6 விபத்து மற்றும் காயப் பதிவு உருவாக்குதல் மற்றும் ஏற்றுக் கொள்ளுதல். ஒரு மருத்துவமனையில் விபத்து மற்றும் காயப் பதிவு நிறுவுதல். 41,80,98,000
7 தர பராமரிப்பு வியூகத்தை உருவாக்குதல் மற்றும் அரசாணை பெறுதல். 27,87,32,000
8 தமிழக அரசின் தொற்றாநோயிகளின் வியூகம் உருவாக்குதல் மற்றும் ஏற்றுக் கொள்ளுதல். 27,87,32,000
9 தமிழ்நாடு சுகாதார கொள்கை உருவாக்குதல் மற்றும் ஏற்றுக் கொள்தல் 27,87,32,000
10 CME திட்டத்திற்கான புதுப்பிக்கப்பட்ட கொள்கை உருவாக்கப்பட்டது மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 20,90,49,000
11 மாவட்ட மற்றும் மாநில சுகாதார கூட்டங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் உவருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. 27,87,32,000
12 தர தலையீடுகள் உருவாக்குதல் 48,77,81,000
13 Steps Survey ( தொற்றாநோயிகளின் கணக்கெடுப்பு) எடுத்தல் 34,73,69,755
14 செயல்பாட்டு ஆராய்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டது 12,19,45,250
மொத்த கோரப்பட்ட தொகை 362,51,53,551

முதலாம் ஆண்டு சாதனைகள் (31.03.2020 முன்) உரிய நேரத்தில் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் உலக வங்கியில் இருந்து ரூ. 362.51 கோடிகள் பெறப்பட்டது.

இரண்டாம் ஆண்டு செயல்பாடுகள் (2020 -2021)
வ.எண் செயல்பாடுகள்
1 வியூகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகள் அடிப்படையிலான தலையீடுகளின் பட்டியலிருந்து குறைந்த பட்சம் 1 ஒப்புதல் தர மேம்பாடு.
2 மருத்துவமனைகளில் தரச்சான்றிதழ்கள் பெறுதல் (Accreditation)
3 செயல்பாட்டு ஆராய்ச்சி திட்டம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி திட்டங்களுக்கான வருடாந்திர அழைப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்மொழிவு வழங்கப்பட்டது. (Operational Research)
4 மாநில மற்றும் 20% மாவட்டங்களிலும் சுகாதார மன்ற கூட்டத்தை நடத்துவது (Health Assembly)
5 சுற்றுசூழுல் கொள்கை உருவாக்குதல் (Environmental Strategy)
6 Steps Survey ( தொற்றாநோயிகளின் கணக்கெடுப்பு) எடுத்தல்
7 தமிழக அரசின் தொற்றாநோயிகளின் மேலாண்மையை பலப்படுத்துதல்
8 கர்பகால பராபரிப்பை மேம்படுத்துதல். (Antenantal Care)
9 நோய் தடுப்பு மேலாண்மையை பலப்படுத்துதல்
10 குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை பலப்படுத்துதல்
11 தாய் சேய் நல சேவைகள் பயனாளிகளுக்கு சென்று அடைவதின் தடைகளை கண்டறிதல். (RCH constraints study)
12 விபத்து மற்றும் காயப் பதிவகத்தை பலப்படுத்துதல். (Trauma Registry)
13 அவசரக் கால பிரிவினை உருவாக்குதல் (Creation of Emergency Department)
14 விபத்து மற்றும் காயப் பிரிவு துறையை பலப்படுத்துதல்.
15 ஒருங்கிணைந்த மருத்துவ சுகாதார தகவல் மேலாண்மை (Health Management Information System) க்கான விரிவான தரவு மாதிரி மற்றும் விரிவான வடிவமைப்பை பலப்படுத்துதல்.
16 மன அழுத்தம் நிர்வாகம் (Depression Stress Management)
17 500 புதிய அவசர கால ஊர்தி கொள்முதல் செய்தல்
இரண்டாம் ஆண்டு பெறப்பட்ட தொகை

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக திட்டத்தின் ஏனைய கலப்பணிகள் இயக்குநரகங்களால் செய்ய இயலாமல் போனது. இருந்தும் பின்வரும் 3 முக்கிய செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டு ரூ.39.89 கோடிகள் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்டது.

வ.எண் செயல்பாடுகள் கோரப்பட்ட தொகை (ரூ.)
1 தமிழ்நாடு சுற்று சூழல் கொள்கை உருவாக்குதல் மற்றும் அரசாணை பெறுதல் 13,93,66,000
2 தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் (TNMSC) மின்-கொள்முதல் முறையில் மொத்த ஒப்பந்தங்களின் மதிப்பில் 20 சதவீதம் மின்-கொள்முதல் செயதல் 20,90,49,000
3 மருத்துவமனைகளில் தரச்சான்றிதழ்கள் பெறுதல் 5,05,20,175
மொத்தம் 39,89,35,175

மேற்கூறிய செயல்பாடுகள் ஜீலை மாதம் 2020ம் ஆண்டு மாநில அதிகாரம் பெற்ற குழு (State Empowered Committee) முன் வைக்கப்பட்டு 255.3 கோடி ரூபாய் பரிசீலினை செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் இப்பணிகள் தொடர்ந்து மூன்றாம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.